பெண் குளிக்கும் போது எட்டிப்பார்த்ததாக கூறி 12-ம் வகுப்பு மாணவனை மரத்தில் கட்டி வைத்து தாக்கிய வீடியோ காட்சிகள் வெளியீடு

0 2890
பெண் குளிக்கும் போது எட்டிப்பார்த்ததாக கூறி 12-ம் வகுப்பு மாணவனை மரத்தில் கட்டி வைத்து தாக்கிய வீடியோ காட்சிகள் வெளியீடு

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே, 12-ஆம் வகுப்பு மாணவனை மரத்தில் கட்டி வைத்து தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.

மேலப்புதூரைச் சேர்ந்த அந்த மாணவன்,பக்கத்துவீட்டைச் சேர்ந்த பிராண்ட் எல்டின் என்பவர் வீட்டில் சில நாட்களுக்கு முன் சிசிடிவி கேமராவை திருடியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், திங்கட்கிழமையன்று, நண்பர்கள், உறவினர்களுடன் மாணவனின் வீட்டுக்குச் சென்ற பிராண்ட் எல்டின், மாணவனை வெளியே இழுத்து வந்து, மரத்தில் கட்டி வைத்து தாக்கியதாகவும், வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து பெண் குளிக்கும் போது எட்டி பார்த்ததாக கூறி தாக்கினார்.

ஆனால் பொய்யான புகாரில் தன் மகனை எல்டின் தாக்கியுள்ளதாகவும், நில விவகாரத்தில் பழிவாங்க தாக்கியதாக மாணவனின் பெற்றோர் கூறியுள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments


BIG STORY