மாநில பட்டியலில் இருந்த கல்வியை பொது பட்டியலுக்கு மாற்றியதை எதிர்த்த வழக்கு: மத்திய அரசு பதிலளிக்கும்படி உயர்நீதிமன்றம் உத்தரவு

0 2042

கல்வியை மாநில பட்டியலில் இருந்து பொதுப் பட்டியலுக்கு மாற்றியதை எதிர்த்து திமுக எம்.எல்.ஏ. தொடர்ந்த வழக்கில் மத்திய - மாநில அரசுகள் பதிலளிக்கும்படி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1975 முதல் 1977 வரையிலான நெருக்கடி நிலை காலகட்டத்தில், மாநில அரசு பட்டியலில் இருந்த கல்வி, மத்திய-மாநில அரசுகளின் பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டது.

இதை சுட்டிக்காட்டி, திமுக எம்எல்ஏ எழிலன் தொடர்ந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசியல் சட்ட நிர்ணய சபையில் இதுசம்பந்தமாக கொண்டு வரப்பட்ட திருத்தம் நிராகரிக்கப்பட்ட நிலையில், அரசியல் சாசனத்தின் அடிப்படைகளை மாற்றியமைக்க முடியாது என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, தரமான கல்வி நிலையங்கள் இல்லாத மாநில மாணவர்களுக்கு இந்த சட்டம் பயனளிக்கிறது என கருத்து தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments