கோவில்கள் முன் வைக்கப்படும் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை - தமிழக அரசு

0 3323

டந்த ஆண்டைப் போலவே, கோவில்கள் முன் வைக்கப்படும் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்கும் என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி அளித்துள்ளது.

இது தொடர்பான மனு, தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி அமர்வில் விசாரணைக்கு வந்தது. கொரோனா பரவல் காரணமாக மத்திய அரசின் அறிவுறுத்தலின் படி தமிழக அரசு  தடை விதித்து வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளதாக  அரசு தரப்பு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம்  தெரிவித்தார். 

விநாயகர் சதுர்த்தியன்று சிறிய கோவில்கள் திறந்து இருக்கும் என்றும், கடந்த ஆண்டை போலவே வீடுகளில் வைத்து வழிபட்ட சிலைகளை சிறிய கோவில்களின் முன்பு  வைக்க அனுமதிப்பதோடு, அந்த சிலைகள், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நீர்நிலைகளில் கரைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். அரசின் இந்த பதிலை  பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments