கடைகள், நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு இருக்கை வசதி கட்டாயம் : பேரவையில் மசோதா தாக்கல்

0 3106

டைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் நபர்களுக்கு இருக்கை வசதியை கட்டாயமாக்கும் மசோதா பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் மசோதாவை தாக்கல் செய்தார். கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் நபர்கள் வேலைநேரம் முழுவதும் நிற்க வைக்கப்படுவதன் விளைவாக பல்வகையான உடல்நலக்கேடுகள் ஏற்படுகின்ற என்றும், எனவே அனைத்து வேலையாட்களுக்கும் இருக்கை வசதி வழங்குதல் அவசியமென கருதுவதாகவும் மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு வழிவகுக்கும் வகையில், தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தினை திருத்தம் செய்ய, சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments