மேட்டுப்பாளையம் உதகை இடையிலான மலை ரயில் சேவை இன்று மீண்டும் தொடக்கம்..பயணிகள் உற்சாகப் பயணம்..!

0 2548

மேட்டுப்பாளையம் உதகை இடையிலான மலை ரயில் போக்குவரத்து 4 மாதங்களுக்கு பின் இன்று மீண்டும் தொடங்கியது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு தினசரி மலை ரயில் போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் கொரானோ தொற்று பரவல் அதிகரித்ததால் நீலகிரி மாவட்டத்திற்கு செல்ல கடும் கட்டுப்பாடுகளை தமிழக அரசு மற்றும்  மாவட்ட நிர்வாகம் அறிவித்ததை தொடர்ந்து சுற்றுலா தலங்கள் மூடப்பட்டன.

இதன்காரணமாக மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு செல்லும் மலை ரயில் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. தற்போது தளர்வுகள் அளிக்கபட்டுள்ள நிலையில் நான்கு மாதங்களுக்கு பிறகு மேட்டுப்பாளையம் உதகை இடையிலான மலை ரயில் போக்குவரத்து இன்று முதல் மீண்டும் துவங்கியுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments