சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து போக்சோ வழக்கில் கைதான நபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை

0 2718

சென்னையில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கி, திருமணம் செய்த பின்னர், கருவை கலைத்து வீட்டை விட்டு வெளியேற்றிய நபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு கொடுங்கையூரை சேர்ந்த கோகுலகண்ணன் என்பவன், வீட்டில் தனியாக இருந்த 16 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த நிலையில் சிறுமி கருவுற்றதால் அவரை கோகுலகண்ணன் திருமணம் செய்துக்கொண்டதாக கூறப்படுகிறது.

அதன்பின், கருவை கலைத்துவிட்டு அவரை வீட்டை விட்டு விரட்டியதாக சிறுமி அளித்த புகாரின் பேரில் கோகுலகண்ணன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டான்.

விசாரணையில் கோகுலகண்ணன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால், 10 ஆண்டு சிறை தண்டனை விதித்த நீதிபதி, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 5 லட்சம் ரூபாயை இழப்பீடாக தமிழக அரசு  வழங்க உத்தரவிட்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments