முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கான மனுக்களை தபால் அல்லது இணையவழியில் அனுப்ப வேண்டும் - தமிழக அரசு

0 9550

கொரோனா அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு பொது மக்கள் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு அளிக்கும் மனுக்களை தபால் அல்லது இணையவழி முறையில் அனுப்புமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் மனு அளிக்க காத்திருப்பது பெருந்தொற்றுக்கு வழி செய்யும் வகையில் இருப்பதாகவும், பொது மக்கள் தபால், www.cmcell.tn.gov.in என்ற இணையதளம், cmhelpline.tnega.org என்ற மின்னஞ்சல் மற்றும் முதலமைச்சரின் உதவி மையம் உள்ளிட்டவைகளின் மூலம் மனுக்களை அனுப்புமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இணையவழி மனுக்களுக்கான ஒப்புகை சம்பந்தப்பட்டவரின் செல்போன்களுக்கு குறுந்தகவல்களாக அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments