கேஸ் கட்டர் மூலம் ஏடிஎம் இயந்திரத்தை வெட்டி பணம் கொள்ளை - சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தீவிர விசாரணை

0 2030
சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தீவிர விசாரணை

ஆந்திராவில் ஏடிஎம் இயந்திரத்தை கேஸ் கட்டர் மூலம் வெட்டி எடுத்து, அதில் இருந்து 65 லட்சம் ரூபாய் பணத்தை திருடி சென்ற கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர். கர்னூல் மாவட்டம் டோன் நகரில் உள்ள எஸ்.பி.ஐ ஏடிஎம் உடைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

அதன் பேரில் சம்பவ இடத்தில் போலீசார் ஆய்வு செய்ததில், கொள்ளையர்கள் ஏடிஎம்-ல் இருந்த சிசிடிவி கேமராக்களை உடைத்து கால்வாயில் வீசிவிட்டு, ஏடிஎம் இயந்திரத்தை கேஸ் கட்டர் மூலம் வெட்டி உள்ளே இருந்த 65 லட்சம் ரூபாயை திருடிச் சென்றுள்ளது தெரியவந்தது.

இதனையடுத்து அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments