தெலங்கானாவில் செப்.1 ல் பள்ளிகளை திறக்க தடை - உயர் நீதிமன்றம்

0 2125
தெலங்கானாவில் செப்.1 ல் பள்ளிகளை திறக்க தடை - உயர் நீதிமன்றம்

நாளை முதல் பள்ளிகளை திறக்கும் தெலங்கானா அரசின் அறிவிப்புக்கு அம்மாநில உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

மருத்துவ நிபுணர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் கலந்து ஆலோசித்த பிறகு செப்டம்பர் ஒன்றாம் தேதி பள்ளிகளை திறக்கப் போவதாக தெலங்கான அரசு கடந்த 24 ஆம் தேதி அறிவித்தது.

கொரோனா கட்டுப்பாட்டுக்கான நிலையான வழிமுறைகளை உறுதி செய்யாமல் அரசு உத்தரவிட்டுள்ளதாக கூறி, அதை எதிர்த்து  ரிட் மனு தாக்கலானது.

அதை விசாரித்த தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு இந்த தடையை பிறப்பித்தது. பள்ளிகளை திறந்தால் மாணவர்களிடம் கொரோனா பரவாது என்பதை உறுதி செய்ய என்ன நடவடிக்கைகளை எடுக்கப்பட்டுள்ளன? என்பதை தெரிவிக்குமாறு அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை அக்டோபர் 4 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments