ஒரகடத்தில் மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்படும் - அமைச்சர் தங்கம் தென்னரசு

0 1727
ஒரகடத்தில் மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்படும்

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் சிப்காட்டில் 150 ஏக்கர் பரப்பளவில் மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

பேரவையில் தொழில்துறை மானியக் கோரிக்கையின் போது பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அவர், ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் தொழிற்பூங்காவில் தோல் பொருள் பூங்கா 250 ஏக்கரில் உருவாக்கப்படும் என்றார்.

அதிக அளவிலான அந்நிய முதலீடுகளை ஈர்க்கவும், ஏற்றுமதி சார்ந்த அறைகலன் உற்பத்தித் தொழில்களை ஏற்படுத்தவும் நாட்டிலேயே முதன்முறையாக பன்னாட்டு அறைகலன் பூங்கா 1,100 ஏக்கரில் தூக்குக்குடியில் உருவாக்கப்படுகிறது என்று கூறிய அமைச்சர், முதற்கட்டமாக 500 ஏக்கரில் அமையவிருக்கும் இந்த அறைகலன் பூங்கா பணிகளை டிசம்பர் 2021-க்குள் முடித்து, துவக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments