சேலத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது அரசு பேருந்து மோதி விபத்து - 10க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம்

0 1968

சேலத்தில் சாலையோரத்தில் காலி நிலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது அரசு விரைவு பேருந்து மோதியதில் பேருந்தில் இருந்த 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

ஆத்தூர் அருகே சம்பேரியில் சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அரசு விரைவு பேருந்து சென்றுகொண்டிருந்தது. பேருந்தை ஓட்டுநர் பழனிச்சாமி ஓட்டிச் சென்ற நிலையில், அதிகாலையில் தூக்க கலக்கம் காரணமாக நடத்துனர் மாதையனிடம் ஓட்ட கொடுத்ததாக கூறப்படுகிறது.

அப்போது, சாலையில் இருந்து விலகி காலி நிலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது மோதி பேருந்து விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் பயணித்த 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில், பேருந்தின் முன்பக்கம் முழுவதும் சேதமடைந்தது. படுகாயம் அடைந்தவர்களை மீட்ட பொதுமக்கள் சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments