அமெரிக்க மீட்பு விமானத்தில் பிறந்த பெண் குழந்தை ; விமானத்தின் குறியீட்டுப் பெயரான ‘ரீச்’ என பெயர் சூட்டப்பட்டது

0 2041
விமானத்தின் குறியீட்டுப் பெயரான ‘ரீச்’ என பெயர் சூட்டப்பட்டது

காபூலில் இருந்து பறந்த அமெரிக்க ராணுவ விமானத்தில், நிறைமாத கர்ப்பிணிக்கு பிறந்த ஆப்கன் குழந்தைக்கு அந்த விமானத்தின் குறியீட்டுப் பெயரான "ரீச்" என பெயரிடப்பட்டுள்ளதாக அமெரிக்க ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காபூலில் இருந்து மீட்கப்பட்டு அந்த விமானத்தில் கொண்டு செல்லப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு, விமானம் ஜெர்மனியை அடைந்ததுடன், விமானத்தின் கார்கோ பகுதியில் வைத்து, ராணுவ மருத்துவர்களின் உதவியுடன் பிரசவம் பார்க்கப்பட்டது. அதன் பின்னர் தாயும் சேயும் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

தங்களை மீட்ட சி-17 விமானத்தின் குறியீட்டுப் பெயரான ரீச் என்பதை தங்களது குழந்தைக்கும் சூட்ட அதன் பெற்றோர்கள் முடிவு செய்தனர். பின்னர், குழந்தை ரீச்-ம் பெற்றோரும் பாதுகாப்பாக அமெரிக்கா சென்றடைந்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments