தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு ; வானிலை மையம்

0 14849
8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தென்காசி ஆகிய மாவட்டங்களில் வருகிற 29-ம் தேதி மற்றும் 30ம் தேதிகளில் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 30-ம் தேதி வரை மழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக  செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திண்டுக்கல், நீலகிரி, ஈரோடு, தேனி ஆகிய 8 மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

29 மற்றும் 30-ம் தேதிகளில் தேனி, விருதுநகர், தூத்துக்குடி, சேலம், ஈரோடு, தர்மபுரி மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments