உங்க வீட்டு குப்பையை 48 நாளில் உரமாக்கலாம் பைப் கம்போசிங் திட்டம்.!

0 3215

தமிழகத்தில் முதன்முறையாக வீடுகளில் உருவாகும் மக்கும் குப்பைகளை பைப் கம்போசிங் மூலம் வீட்டிலேயே உரமாக்கும் திட்டம் திருநெல்வேலி மாநகராட்சியில் தொடங்கப்பட்டுள்ளது  இது குறித்த  செய்தி தொகுப்பு. 

ஒவ்வொரு நாளும் வீடுகளிலிருந்து உருவாகும் குப்பைகள் மாநகராட்சி உரக் கிடங்குகளில் டன் கணக்கில் சேருகின்றன. இதனை உரமாக்கி முறையாக கையாள்வதில் பெரும் சிக்கல்களை ஒவ்வொரு மாநகராட்சியும் சந்தித்து வருகிறது.

நெல்லை மாநகராட்சியில் மொத்தம் 55 வார்டுகள், இவற்றிலிருந்து நாள்தோறும் 170 மெட்ரிக் டன் குப்பைகள் உருவாகிறது. அதில் 102 மெட்ரிக் டன் மக்கும் தன்மையுடையது. 68 மெட்ரிக் டன் மக்காத தன்மையுடையது. மேற்படி 102 மெட்ரிக் டன் மக்கும் குப்பைகளை ராமையன்பட்டி குப்பை கிடங்கிற்கு செல்லாமல் தடுக்கும் பொருட்டு நெல்லை மாநகரில் 45 இடங்களில் (MCC ) எனப்படும் "நுண் உர மையங்கள்" மூலம் குப்பைகள் உரமாக்கப்படுகிறது.

இந்தநிலையில் பொதுமக்கள், தங்கள் வீட்டு கழிவுகளை தாங்களே கையாண்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு நாமும் பொறுப்பு என்ற வகையில் அவரவர் வீட்டில் உருவாகும் மக்கும் கழிவுகளை உரமாக்கும் வகையில் திருநெல்வேலி மாநகராட்சி பாளையங்கோட்டை மண்டலத்தில் "வி.எம்.சத்திரம் மேம்பாட்டு அமைப்பு" மூலம் இளைஞர்களின் ஒத்துழைப்புடன் 500 வீடுகளில் பைப் கம்போஸ்டிங் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. முதற்கட்டமாக 150 வீடுகளில் இத் திட்டம் துவங்கப்பட்டுள்ளது.

இந்த பைப் கம்போஸ்டிங் முறையானது 5 அடி உயரம், 5 அங்குல சுற்றளவு கொண்ட இரண்டு PVC பைப்புகளை அவரவர் தங்கள் வீட்டு வளாகத்தில் ஒரு அடி ஆழ குழியில் செங்குத்தாக நிற்கும் வகையில் புதைக்க வேண்டும். முதல் குழாயில் அன்றாடம் வீட்டில் சமையலறை கழிவுகளை அதில் கொட்டி வர வேண்டும். ஒரு குழாய் நிறைந்தவுடன் அடுத்த குழாயை பயன்படுத்தி வர வேண்டும். 45 நாட்கள் கழித்து முதல் குழாயை மண்ணில் இருந்து உருவி உள்ளே இருக்கும் உரத்தை எடுத்து விட வேண்டும். இடத்தை உரத்தை வீட்டிலுள்ள மாடித்தோட்டம் பூந்தொட்டிகளில் பயன்படுத்தலாம். அதன் பின் அதே இடத்தில் பைப்பை மீண்டும் புதைத்து விட வேண்டும்.

இதன் மூலம் நம் வீட்டின் குப்பையில் இருந்து தயாரிக்கப்பட்ட உரத்தை நாமே உபயோகமானதாக மாற்றிய பெருமையும் திருப்தியும் கிடைக்கும் மசுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு நாமும் பங்கு வகிக்றோம் என்ற எண்ணமும், நோய் பரவலை தடுக்கும் நம்பிக்கையும் ஏற்படும் அதிகாரிகள் சுட்டிக்கட்டுகின்றனர்

இந்த திட்டத்தை தொடங்கி வைத்த நெல்லை மாவட்ட ஆட்சியர், மிகவும் குறைந்த செலவில் இத்திட்டத்தை ஒவ்வொருவர் வீட்டிலும் செயல்படுத்தலாம் என்றும் இதன்மூலம் மக்கும் குப்பைகள் பொதுவெளியில் டன் கணக்கில் சேராமல் அவரவர் வீட்டிலேயே உரமாக மாற்றப்படுவதால் வீட்டில் தேவையான காய்கறி தோட்டங்களை மாடித் தோட்டங்களை உருவாக்கி கொள்ளலாம். ((spl gfx out))இந்த திட்டத்தை மற்ற வார்டுகளிலும் செயல்படுத்த ஆர்வமுள்ளவர்கள் மாநகராட்சி அலுவலகத்தை தொடர்பு கொண்டு முன்வரலாம் என்றும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments