வீட்டை காலி செய்யக்கோரி மருமகளை கத்தியால் தாக்கிய மாமனார்

0 2437

சென்னை அடுத்த அம்பத்தூரில் வீட்டை காலி செய்யக்கோரி மருமகளை கத்தியால் தாக்கிய மாமனார் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கணவரை பிரிந்து வாழும் டெய்சிக்கும், அதேபகுதியில் வசிக்கும் மாமனார் மற்றும் நாத்தனாருடன் மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. டெய்சியை வீட்டை காலி செய்யக் கோரி மாமனார் ஜெகநாதன் கத்தியால் தாக்கியதாக கூறப்படுகிறது.

காயமடைந்த டெய்சியை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து ஜெகநாதன், நாத்தனார் மலர்விழி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.     

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments