இந்தியாவில் "பூஸ்டர் டோஸ்" தடுப்பூசி எப்போது? - மத்திய அரசு அதிகாரி தகவல்

0 2894

இந்தியாவில் கொரோனா தடுப்பு பூஸ்டர் டோஸ் எனும் மூன்றாவது டோஸ் தடுப்பூசி போடுவது குறித்து தற்போது வரை விவாதிக்கவில்லை என தடுப்பூசிக்கான தேசிய தொழில் நுட்ப ஆலோசனை குழுவின் தலைவர் டாக்டர் அரோரா தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், நாட்டு மக்கள் அனைவருக்கும் முழுமையாக 2 டோஸ் தடுப்பூசிபோட்ட பின்னர்தான் பூஸ்டர் டோஸ் குறித்து கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும் என்றார்.

இந்தியாவில் பூஸ்டர் டோஸ் பின்பற்றப்பட வேண்டுமா வேண்டாமா என்பதை அறிவியல் ஆய்வுகள் மூலமாகவே முடிவு செய்யமுடியும் எனவும் அரோரா தெரிவித்தார். அமெரிக்காவில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கு பூஸ்டர் டோஸ் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments