பொள்ளாச்சி அருகே 65 அடி ஆழ கிணற்றில் கார் விழுந்து விபத்து - ஒருவர் பலி

0 3064
பொள்ளாச்சி அருகே 65 அடி ஆழ கிணற்றில் கார் விழுந்து விபத்து - ஒருவர் பலி

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே 65 அடி ஆழ கிணற்றில் கார் விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

நாகூரை சேர்ந்த விவசாயி ஈஸ்வரன் என்பவருக்கு அவரது மகள் புதிய மாருதி XL6 காரை வாங்கி கொடுத்துள்ளார். ஈஸ்வரன் தனது பேரனுடன் அந்த காரை ஓட்டி பார்க்க முயன்றுள்ளார்.

இதுவரை கியர் உள்ள காரை மட்டுமே ஒட்டத்தெரிந்த அவருக்கு தானியங்கி கியர் வசதியுள்ள அந்த காரை ஓட்ட தெரியாததால், கியர் என நினைத்து ரிவர்ஸ் ஸ்விட்சை ஆன் செய்ததோடு, ஆக்சிலேட்டரையும் மிதித்துள்ளார்.

இதனால் வீட்டின் அருகே இருந்த கிணற்றிற்குள் கார் விழுந்தது. இதில் ஈஸ்வரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், பேரன் கோகுல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments