"குறுக்கு வழிகளை பயன்படுத்தி வெற்றியை அடைய நினைக்கக் கூடாது" -நீரஜ் சோப்ரா அறிவுறுத்தல்

0 9596

குறுக்கு வழிகளை பயன்படுத்தி வெற்றியை அடைய நினைக்கக் கூடாது என ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற தடகள வீரர் நீரஜ் சோப்ரா அறிவுறுத்தியுள்ளார்.

டெல்லி செங்கோட்டையில் நடந்த 75ஆவது சுதந்திர தின விழாவில் பங்கேற்ற நீரஜ் சோப்ரா செய்தியாளர்களிடம் பேசுகையில், தன்னம்பிக்கையே மிகவும் பெரிது எனவும், உங்களையும், உங்களின் பயிற்சியையும் முழு மனதாக நம்ப வேண்டும் எனவும் கூறினார்.

மேலும், சுதந்திர தினவிழாவை நேரில் கண்டு ரசித்தது புதிய அனுபவமாக இருந்தது என நீரஜ் சோப்ரா தெரிவித்தார். தனக்கு உடல்நிலை சரியில்லை என வெளியான தகவல் உண்மை தான் எனவும், லேசான காய்ச்சல் இருந்ததாகவும், தற்போது நன்றாக இருப்பதாகவும் நீரஜ் சோப்ரா கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments