தமிழக பட்ஜெட் தாக்கல் ; மகளிர் பேறுகால விடுப்பு 12 மாதங்களாக அதிகரிப்பு

0 2715
மகளிர் பேறுகால விடுப்பு 12 மாதங்களாக அதிகரிப்பு

அரசு ஊழியர்களுக்கான மகளிர் பேறுகால விடுப்பு 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக அதிகரித்து, தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.. கோவையில் ரூபாய் 225 கோடி செலவில் 500 ஏக்கரில் பாதுகாப்பு கருவிகள் உற்பத்தி பூங்கா,  தொழில் வளர்ச்சியில் பின்தங்கியுள்ள 9 மாவட்டங்களில் புதிய சிப்காட் தொழிற்பூங்காக்கள் ஏற்படுத்தப்படும் என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

வணிகம் செய்ய உகந்த மாநிலங்கள் பட்டியலில் 14வது இடத்தில் உள்ள தமிழகத்தை முதல் 3 இடத்திற்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாம்பரம் வழியாக, விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து முனையம் வரை மெட்ரோ ரயில் திட்டத்தை நீட்டிக்கும் பணியை அரசு விரைவாகத் தொடங்க உள்ளது. தூத்துக்குடியில் அறைகலன் பூங்கா, திருவள்ளூர் மாவட்டம் மாநல்லூரில் மின்வாகனப் பூங்கா, தொழில் வளர்ச்சியில் பின்தங்கியுள்ள 9 மாவட்டங்களில் புதிய சிப்காட் தொழிற்பூங்காக்கள் உள்ளிட்ட அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன.

அரசுப் பணிகளில் மகளிர் பேறுகால விடுப்பு 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ரூபாய் 100 கோடியில் 100 கோவில்களில் திருத்தேர், திருக்குளம், நந்தனம் சீரமைக்கப்படும், 12 ஆயிரத்து 959 கோவில்களில் ஒரு கால பூஜையை உறுதி செய்ய ரூபாய் 130 கோடியில் நிதி நிலை உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

கொரோனாவில் பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்விச் செலவை தமிழக அரசே ஏற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments