1 ரூபாயில் தமிழக அரசுக்கான வரவு, செலவு எவ்வளவு?

0 4056

ரு ரூபாயில் தமிழக அரசு செய்யும் வரவு செலவு குறித்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

ஒரு ரூபாயில் அரசுக்கு வரவாக மாநிலத்தின் சொந்த வரி வருவாயில் 39 காசு, பொது நிறுவனங்கள் மூலம் வரும் வருமானத்தில் 36 காசு, மத்திய அரசு வழங்கும் மானியத்தில் 11 காசு, கிடைக்கிறது. மத்திய அரசு வரியில் மாநிலத்தின் பங்காக 8 காசு, மாநிலத்தின் சொந்த வரி அல்லா வருவாயாக 4 காசு, மூலதனம் இல்லா வருமானமாக 2 காசு கிடைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செலவாக, மானியம் மற்றும் இலவசத் திட்டங்களுக்கு 35 காசு, அரசு ஊழியர்களின் சம்பளத்திற்கு 19 காசு, மூலதன செலவாக 13 காசு, அரசு வாங்கிய கடனுக்கான வட்டியாக 13 காசு செலவிடப்படுகிறது.

ஓய்வூதிய பலன்களுக்கு 8 காசு, பொது நிறுவனங்களின் கடனுக்கு 6 காசு, சம்பளம் அல்லா செலவினங்களுக்கு 4 காசு, அரசு ஊழியர்கள் கடன் மற்றும் முன்பணத்திற்கு 2 காசு, செலவிடப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments