தமிழகத்தில் இன்றும் நாளையும் 11 மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் - சென்னை வானிலை ஆய்வு மையம்

0 11118
இன்றும் நாளையும் 11 மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும்

நீலகிரி, கோவை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்யக் கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி மற்றும் வெப்பச்சலனத்தால் 11 மாவட்டங்களில் கனமழையும், மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக் கூடும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆகஸ்டு 10ஆம் நாள் நீலகிரி, கோவை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என்றும், பிற மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

ஆகஸ்டு 11ஆம் நாள் மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்களிலும் டெல்டா மாவட்டங்களிலும் கனமழை பெய்யக் கூடும் என்றும் அறிவித்துள்ளது. ஆகஸ்டு 12ஆம் நாள் உள் மாவட்டங்களில் கன மழையும், பிற மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது. சென்னையில் அடுத்த இரு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், ஒருசில பகுதிகளில் இலேசான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments