வட்டி பணம் செலுத்த முடியாத 23 வயது பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த 60 வயது முதியவர்

0 6478

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே வட்டி பணத்தை திரும்ப செலுத்த முடியாத இளம்பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

நாடுகானியை பகுதியைச் சேர்ந்த 23 வயது இளம்பெண், அதே பகுதியைச் சேர்ந்த 60 வயதான பாலகிருஷ்ணனிடம் 3 ஆண்டுகளுக்கு முன்பு, தமது கணவருக்கு தெரியாமல் மூவாயிரம் ரூபாய் வட்டிக்கு வாங்கினார்.

வறுமை காரணமாக பணத்தை திருப்பி செலுத்த முடியாத நிலையில், அந்த பெண்ணை மிரட்டி பாலகிருஷ்ணன் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

பாலகிருஷ்ணன் தொடர்ந்து தொல்லை செய்ததால், அந்த பெண் தமது கணவருக்கு தகவல் தெரிவித்து, அவர் மூலம் தேவாலா அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments