மாநாடு படப்பிடிப்பு நிறைவு.. படக்குழுவினர் 300 பேருக்குக் கைக்கடிகாரங்களைப் பரிசாக வழங்கி மகிழ்வித்த சிலம்பரசன்..!

0 3756
சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடித்துள்ள மாநாடு திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளது.

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடித்துள்ள மாநாடு திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளது.

இந்தப் படத்தின் பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில், இப்போது படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் வெளியாகவுள்ள மாநாடு படம் அக்டோபர் மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

படப்பிடிப்பு நிறைவடைந்ததைப் படக்குழுவினர் கேக் வெட்டிக் கொண்டாடினர்.

படக்குழுவினர் 300 பேருக்கு விலை உயர்ந்த கைக் கடிகாரங்களைப் பரிசாக வழங்கி சிலம்பரசன் அனைவரையும் மகிழ்வித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments