தமிழ்நாட்டில் மேலும் 3,039 பேருக்கு கொரோனா ; 3,411 பேர் டிஸ்சார்ஜ்

0 2756
தமிழ்நாட்டில் மேலும் 3,039 பேருக்கு கொரோனா ; 3,411 பேர் டிஸ்சார்ஜ்

தமிழ்நாட்டில் 29 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு 100-க்கும் கீழாக குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக, 3 ஆயிரத்து 39 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 349 ஆக சரிந்துள்ளது. சென்னையை பொறுத்தவரை,180 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஈரோடு, தஞ்சாவூர், திருப்பூர், திருச்சிராப்பள்ளி, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்துள்ளது.

ஒரே நாளில் 3 ஆயிரத்து 411 பேர் குணம் அடைந்து, வீடு திரும்பி உள்ளனர். மாநிலம் முழுவதும் 33 ஆயிரத்து 224 பேர் வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாக  மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments