கிழக்கு லடாக் எல்லையில் இந்தியாவுடனான மோதல் சம்பவங்களுக்கு பொறுப்பான சீன அதிகாரிக்கு பதவி உயர்வு

0 3324
கிழக்கு லடாக் எல்லையில் இந்தியாவுடனான மோதல் சம்பவங்களுக்கு பொறுப்பான சீன அதிகாரிக்கு பதவி உயர்வு

கிழக்கு லடாக் எல்லையில் இந்தியாவுடனான மோதல் சம்பவங்களுக்கு மையமாக இருந்த ராணுவ கமாண்டர் சூ கிலிங் (Xu Qiling) என்பவருக்கு சீன ராணுவத்தின் மிகவும் உயர்ந்த ஜெனரல் பதவியை, அதிபர் ஷி ஜின்பிங் வழங்கி உள்ளார்.

சீன ராணுவத்தின் மேற்கு படைப்பிரிவின் தரைப்படையினருக்கு சூ கிலிங் லெப்டினன்ட் ஜெனரல் அந்தஸ்தில் கமாண்டராக இருந்தார். இந்த நிலையில் அவர் உட்பட நான்கு கமாண்டர்கள் ஜெனரல்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15 ஆம் தேதி கால்வன் பள்ளத்தாக்கு மோதல் நடந்தது. அதற்கு ஒரு மாதத்திற்கு முன்னர் சூ கிலிங் சீனாவின் மேற்கு படைப்பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments