உ.பி.யில் மணமகன் வீட்டிற்கு ஹெலிகாப்டரில் சென்ற மணமகள்

0 3778

உத்தரப்பிரதேசத்தில் மணமகன் வீட்டிற்கு மணமகள் ஒருவர் ஹெலிகாப்டரில் வந்து இறங்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பதான் நகர பாரதிய ஜனதா துணைத் தலைவராக இருக்கும் வேத்ராம் லோதியின் மகள் சுனிதாவுக்கும், பரேலி மாவட்டத்தின் ஆலம்பூர் கோட் கிராமத்தை சேர்ந்த ஒமேந்திர சிங் என்பவருக்கும் கடந்த டிசம்பர் மாதம் பதிவுத் திருமணம் நடந்தது. ஆலம்பூர் கோட் கிராமத்தின் தலைவி பதவிக்கு அந்த  ஊரின் வாக்காளராக இருந்தால் மட்டுமே தேர்தலில் போட்டியிட முடியும் என்பதால் இந்த திருமணம் நடைபெற்றது.

அதன்பின்னர் கடந்த 3-ந்தேதி சுனிதாவுக்கும்,  ஒமேந்திர சிங்குக்கும் இந்து முறைப்படி திருமணம் நடந்தது. இதற்காக மணமகனின் வீட்டுக்கு சுனிதா, ஹெலிகாப்டரில் சென்று இறங்கியதை அப்பகுதி மக்கள் வியப்புடன் பார்த்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments