மணப்பெண் தேடிய கேரள இளைஞரிடம்பெண் இருப்பதாக வரவழைத்து நகை, பணம் கொள்ளை

0 3073
மணப்பெண் தேடிய கேரள இளைஞரிடம்பெண் இருப்பதாக வரவழைத்து நகை, பணம் கொள்ளை

திருமணத்துக்குப் பெண் தேடிய கேரள இளைஞரிடம் மணப்பெண் இருப்பதாகக் கூறி வரவழைத்து, நகை, பணம் பறித்த திருப்பூரைச் சேர்ந்த கும்பலை கேரள போலீசார் கைது செய்தனர்.

கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் திருமணத்துக்குப் பெண் தேவை என பத்திரிக்கையில் விளம்பரம் செய்திருந்தார். திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இருந்து பேசிய ஒரு நபர், தங்கள் பகுதியில் மணப்பெண் இருப்பதாகக் கூறவே, நண்பர் ஒருவருடன் ராமகிருஷ்ணன் பல்லடம் வந்துள்ளார்.

இருவரையும் வீடு ஒன்றில் கட்டிப்போட்ட ஒரு கும்பல், 7 சவரன் நகை, செல்போன், 40 ஆயிரம் ரூபாய் பணம் உள்ளிட்டவற்றைப் பறித்துக் கொண்டு விரட்டியுள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments