2021 டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்திலும், ஒமானிலும் நடக்கும் -ஐசிசி அறிவிப்பு

0 4358

2021 டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்திலும், ஒமானிலும் நடக்கும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த போட்டிகளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சங்கம் நடத்தும். போட்டிகள், வரும் அக்டோபர் 17 ஆம் தேதி முதல் நவம்பர் 14 ஆம் தேதி வரை, துபாய், அபுதாபி, ஷார்ஜா மற்றும் ஓமான் கிரிக்கெட் அகாடமி மைதானத்தில் நடக்கும்.

கொரோனா பரவலின் பின்னணியில் இந்த போட்டிகள் இந்தியாவில் நடத்தப்படாதது ஏமாற்றம் அளித்தாலும், புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள இடங்களில் போட்டிகள் முழு பாதுகாப்புடன் நடத்தப்படும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் சிஇஓ ஜியோப் அல்லார்டைஸ் (Geoff Allardice) தெரிவித்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments