அவசர நிலையின் இருண்ட நாட்களை ஒரு போதும் மறக்க முடியாது - பிரதமர் மோடி கருத்து

0 3379
அவசர நிலையின் இருண்ட நாட்களை ஒரு போதும் மறக்க முடியாது - பிரதமர் மோடி கருத்து

அவசர நிலையின் இருண்ட நாட்களை ஒரு போதும் மறக்க முடியாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

அந்த காலகட்டத்தில் இந்தியாவின் அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக அமைப்புகள் திட்டமிட்டு சிதைக்கப்பட்டன என, அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டதன்  46 ஆவது ஆண்டு தினத்தை ஒட்டி வெளியிட்ட செய்தியில் மோடி குறிப்பிட்டுள்ளார்.

உள்துறை அமைச்சர் அமித் ஷா டுவிட்டரில் வெளியிட்ட செய்தியில், அவசர நிலை சுதந்திர இந்தியாவின் கறுப்பு அத்தியாயங்களில் ஒன்று என  குறிப்பிட்டுள்ளார்.

அவசர நிலையை கொண்டு வந்து உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தை காங்கிரஸ் கட்சி கொலை செய்தததாகவும் அமித் ஷா குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments