கொரோனா 3 ஆம் அலை வீசினாலும், அதற்கு டெல்டா பிளஸ் வைரஸ் ஒரு காரணமாக இருக்காது - CSIR மரபணு ஆய்வு நிறுவன தலைவர் தகவல்

0 2504
கொரோனா 3 ஆம் அலை வீசினாலும், அதற்கு டெல்டா பிளஸ் வைரஸ் ஒரு காரணமாக இருக்காது - CSIR மரபணு ஆய்வு நிறுவன தலைவர் தகவல்

கொரோனா 3 ஆம் அலை வீசினாலும், அதற்கு டெல்டா பிளஸ் வைரஸ் ஒரு காரணமாக இருக்காது என சிஎஸ்ஐஆர்-ன் கீழ் பணியாற்றும் முக்கிய மரபணு ஆய்வு விஞ்ஞானியான அனுராக் அகர்வால் தெரிவித்துள்ளார்.

அவரது தலைமையில் இயங்கும் மரபணு மற்றும் ஒருங்கிணைந்த உயிரியல் நிறுவனம், இந்த மாதம் மகாராஷ்டிராவை சேர்ந்த 3 ஆயிரத்து 500 க்கும் அதிகமான நோயாளிகளின் மாதிரிகளை சேகரித்து கொரோனா மரபுக்கூறுகளை ஆய்வு செய்தது.

அதில் ஒரு விழுக்காட்டிற்கும் குறைவாகவே டெல்டா பிளஸ் மரபணு மாற்ற வைரசுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக அனுராக் அகர்வால் தெரிவித்துள்ளார்.

இரண்டாவது அலை இப்போதும் வீசிக்கொண்டிருக்கும் நிலையில் 3 ஆம் அலையை பற்றியும், டெல்டா பிளஸ் வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதைப் பற்றியும் மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments