உ.பி.யில் 17வயது சிறுமியை மாடியில் இருந்து கீழே வீசிய இளைஞர்கள் - 2பேர் கைது

0 2938
உ.பி.யில் 17வயது சிறுமியை மாடியில் இருந்து கீழே வீசிய இளைஞர்கள்

த்தரப் பிரதேச மாநிலத்தில் 17 வயது சிறுமியை 3 இளைஞர்கள் 2வது மாடியிலிருந்து தூக்கி வீசிய சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

மதுராவில் 17 வயது சிறுமி ஒருவர் அவரது பெற்றோருடன் தங்கியிருந்த குடியிருப்புக்குள் 3 இளைஞர்கள் சென்றனர். பின்னர் அங்கு 3பேரும் சிறுமியுடன் தகராறில் ஈடுபட்ட நிலையில் ஆத்திரத்தில் அவளை தூக்கி மாடியில் இருந்து கீழே எறிந்துள்ளனர்.

இதில் படுகாயம் அடைந்த அந்த சிறுமி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்த புகாரின் பேரில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments