தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பதிலுரை

0 2469
தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பதிலுரை

ட்டப் பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடந்த விவாதங்களுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பதில் அளிக்கிறார்.

16-ஆவது சட்டப் பேரவையின் முதல் கூட்டத் தொடர் கடந்த 21-ஆம் தேதி தொடங்கியது. அன்றைய தினம் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றினார். அவரது உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்மீது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு கட்சி உறுப்பினர்கள் பேசினர்.

விவாதத்தின்போது முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் அவ்வப்போது பதிலளித்தனர். இந்த நிலையில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடந்த விவாதங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று பதிலளித்து உரையாற்றுகிறார்.

அவரது உரைக்குப் பிறகு, ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்ட மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்படும். அதன்பின், பேரவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments