”நடிகர் விஜய் வெளியில் வந்து தங்களைப் பார்க்க வேண்டும்’’ விஜய் வீட்டின் முன் ரசிகர்கள் தர்ணா

0 9856

நடிகர் விஜயை நேரில் பார்த்து பிறந்த நாள் வாழ்த்து சொல்லாமல் போக மாட்டோம் என அடம்பிடித்து, அவரது வீட்டின் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட ரசிகர்கள், போலீசார் மூலம் அப்புறப்படுத்தப்பட்டனர்.

பெண் ரசிகர்கள் சிலர் பரிசுப் பொருட்களுடன் காத்திருந்தனர். சாலையில் சென்ற சொகுசு கார்களை மறித்து காருக்குள் விஜய் இருக்கிறாரா என்றும் சிலர் ஆர்வமிகுதியால் பார்த்தனர்.

ஒரு கட்டத்தில் விஜய் வீட்டில் இல்லை என்று கூறியும் கலைந்து செல்ல மறுத்த ரசிகர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். போக்குவரத்துக்கு இடையூறு செய்வதாக கூறி குடியிருப்புவாசிகள் புகாரளிக்கவே போலீசார் வந்து ரசிகர்களுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments