2 சவரன் செயினை கொரோனா நிவாரண நிதியாக கொடுத்த பெண்ணுக்கு வேலை செய்வதற்கான ஆணையை வழங்கினார் அமைச்சர் செந்தில் பாலாஜி

0 5198
கொரோனா நிவாரண நிதியாக கழுத்தில் கிடந்த 2 சவரன் செயினை முதலமைச்சரிடம் கழட்டி கொடுத்த, சேலம் மாவட்டம் மேட்டூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி பெண்ணுக்கு வேலை வழங்கப்பட்டது.

கொரோனா நிவாரண நிதியாக கழுத்தில் கிடந்த 2 சவரன் செயினை முதலமைச்சரிடம் கழட்டி கொடுத்த, சேலம் மாவட்டம் மேட்டூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி பெண்ணுக்கு வேலை வழங்கப்பட்டது.

மேட்டூர் அணை திறப்பிற்கு வந்திருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், கணிணி பொறியாளரான சௌமியா, வேலைவாய்ப்பு வழங்கக் கூறி கோரிக்கை விடுத்ததோடு, கழுத்தில் கிடந்த 2 சவரன் செயினை கழட்டி கொரோனா நிவாரண நிதியாக கொடுத்தார். சௌமியாவுக்கு வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் கூறியிருந்தார்.

இந்த நிலையில், முதலமைச்சர் உத்தரவின் பேரில் சௌமியா வீட்டுக்குச் சென்ற மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, தனியார் நிறுவனத்தில் வேலை செய்வதற்கான உத்தரவை சௌமியாவிடம் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். பின்னர், சௌமியா செல்போன் மூலம் முதலமைச்சரிடம் பேசி நன்றி தெரிவித்துக் கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments