இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 84,332 பேருக்கு கொரோனா பாதிப்பு; 4,002 பேர் உயிரிழப்பு

0 2676
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 84,332 பேருக்கு கொரோனா பாதிப்பு; 4,002 பேர் உயிரிழப்பு

நாட்டில் ஒரு நாள் கொரோனா தொற்று எண்ணிக்கை, 70 நாட்களில் இல்லாத அளவுக்கு, 85 ஆயிரத்திற்கும் குறைவாக பதிவாகியுள்ளது.

கடந்த 24 மணி 84 ஆயிரத்து 332 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 4 ஆயிரத்து 2 பேர் பெருந்தொற்றுக்கு பலியாகியுள்ளனர். 1 லட்சத்து 21 ஆயிரம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனா பாதித்து குணமடைந்தவர்கள் விகிதம் 95 சதவீதத்தை தாண்டியுள்ளது. சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 11 லட்சத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. மாநிலவாரியாக தினசரி பாதிப்பு அடிப்படையில், 15 ஆயிரத்து 759 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

14 ஆயிரத்து 233 பேருக்கு உறுதி செய்யப்பட்டு கேரளம் இரண்டாமிடத்திலும், 11 ஆயிரத்து 766 பேருக்கு உறுதி செய்யப்பட்டு மகாராஷ்டிரம் மூன்றாமிடத்திலும் உள்ளன. நாட்டில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் எணணிக்கை 25 கோடியை நெருங்குகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments