தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு.. 27 மாவட்டங்களில் எதற்கெல்லாம் அனுமதி? முழு விவரம்

0 8577
கொரோனா தொற்று குறைந்து வரும் சென்னை உள்பட 27 மாவட்டங்களில் வரும் 14 ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அழகு நிலையங்கள், சலூன்கள் செயல்படவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று குறைந்து வரும் சென்னை உள்பட 27 மாவட்டங்களில் வரும் 14 ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அழகு நிலையங்கள், சலூன்கள் செயல்படவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கோவை, திருப்பூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களைத்தவிர, சென்னை உள்பட இதர 27 மாவட்டங்களில் நோய்த் தொற்று குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு, ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள சில செயல்பாடுகளுடன் கூடுதலாக மேலும் சில செயல்பாடுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி அழகு நிலையங்கள், சலூன்கள் குளிர் சாதன வசதி இல்லாமலும், ஒரு நேரத்தில் 50 சதவிகித வாடிக்கையாளர்கள் மட்டும் அனுமதிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

அரசு பூங்காக்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ள பூங்காக்கள், விளையாட்டு திடல்களில் காலை 6.00 மணி முதல் காலை 9.00 மணி வரை நடைப்பயிற்சிக்காக மட்டும் அனுமதிக்கப்படும்.

வேளாண் உபகரணங்கள்,பம்பு செட் பழுது நீக்கும் கடைகள் காலை 9.00 மணிமுதல் மாலை 5.00 மணிவரையும் கண்கண்ணாடி விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள் காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணிவரையும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மண்பாண்டம் மற்றும் கைவினைப் பொருட்கள் தயாரித்தல் மற்றும் விற்பனை காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை செயல்பட அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிக்சி, கிரைண்டர், தொலைக்காட்சி போன்ற வீட்டு உபயோக மின்பொருட்களின் பழுதுநீக்கும் கடைகள் காலை 9.00 மணிமுதல் மதியம்2.00 மணிவரை செயல்பட அனுமதிக்கப்படும்.

27 மாவட்டங்களில் மட்டும் டாஸ்மாக் கடைகள் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. செல்பேசி மற்றும் அதனைச் சார்ந்த பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9.00 மணிமுதல் மதியம் 2.00 மணிவரை செயல்படலாம் என அரசு அறிவித்துள்ளது.

கட்டுமானப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9.00 மணிமுதல் மதியம்2.00 மணிவரை செயல்படவும், மிக்ஸி, கிரைண்டர், டி.வி. பிரிட்ஜ் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9.00 மணிமுதல் மதியம் 2.00 மணிவரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை தொடர்பான நிர்வாகப்பணிகள் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள ஏற்றுமதி நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்களுக்கு இடுபொருள் தயாரித்து வழங்கும் நிறுவனங்கள் 50 சதவிகிதம் பணியாளர்களுடனும், இதர தொழிற்சாலைகளும் 33 சதவிகிதம் பணியாளர்களுடனும் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப்பின்பற்றி செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் தங்களது இருசக்கர வாகனங்களிலும் இ-பதிவு மற்றும் தொழிற்சாலை வழங்கியுள்ள அடையாள அட்டையுடன் பணிக்கு சென்றுவரஅனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களில் 20 சதவிகிதம் பணியாளர்கள் அல்லது 10 நபர்கள் மட்டும் பணிபுரிய அனுமதிக்கப்படுவார்கள் என்று அரசு தெரிவித்துள்ளது. வீட்டுவசதிநிறுவனம் வங்கி சாரா நிதிநிறுவனங்கள், மற்றும் அனைத்து காப்பீட்டு நிறுவனங்கள் 33 சதவிகித பணியாளர்களுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments