கருப்பு பூஞ்சைக்கு எதிரான மருந்துக்கு தட்டுப்பாடு இருப்பது உண்மை தான் -அமைச்சர் மா.சுப்பிரமணியன்

0 1935

தமிழகத்தில் கருப்பு பூஞ்சைக்கு எதிரான மருந்துக்கு தட்டுப்பாடு இருப்பது உண்மை தான் என்ற சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இணை மருந்து குறித்து ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ளார்.

சென்னை எம்.ஜி.எம். மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்த அவர், தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி போட, நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டதுடன் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.

கருப்பு பூஞ்சைக்கு எதிரான இணை மருந்து குறித்து ஆராய்ந்து வருவதாகவும், அதற்கான அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும் எனவும் அவர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments