கல்லணையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு...!

0 2248

திருச்சி மாவட்டம் கல்லணையை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்கிறார்.

கல்லணை கால்வாயில் கடைமடை வரை தண்ணீர் சென்று சேர்வதற்கு வசதியாக ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி நிதி உதவியுடன் நவீனப்படுத்தும் பணிகள் மற்றும் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனை ஆய்வு செய்வதற்காக இன்று காலை சென்னையில் இருந்து சிறப்பு விமானம் மூலம் திருச்சி செல்லும் மு.க.ஸ்டாலின், அங்கிருந்து கல்லணை கால்வாய்க்கு செல்கிறார்.

அங்கு நடைபெறும் பணிகளை ஆய்வு செய்த பின்னர், அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட உள்ள நிலையில், அதற்கு முன்னதாக கால்வாய்களை தூர்வாரும் பணிகளுக்கு 65 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன.

இந்த பணிகளையும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆய்வு செய்கிறார். இந்த நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு திருவாரூர் செல்லும் முதலமைச்சர், நாளை மேட்டூர் அணைக்கு சென்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். அதனை தொடர்ந்து மேட்டூர் அணையில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீரை திறந்து வைக்கிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments