”தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு” -சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

0 7189
”தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு” -சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

வெப்பச்சலனம் மற்றும், வளிமண்டலச் சுழற்சி காரணமாகத் தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

விருதுநகர், மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் கன மழையும், பிற மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது.

நாளை வட உள் மாவட்டங்களில் கன மழையும், பிற மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது. திங்களன்று மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது.

ஜூன் 8, 9 ஆகிய நாட்களில் தென் கடலோர மாவட்டங்கள், மேற்குத்தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது.

சென்னையில் அடுத்த இரு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments