குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடு டுவிட்டர் பக்கத்தில் உள்ள நீலநிறப் பட்டை நீக்கம்

0 2410

குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடு டுவிட்டர் பக்கத்தில் உள்ள நீலநிறப் பட்டையை டுவிட்டர் நீக்கியுள்ளது.

குடியரசுத் தலைவர் வெங்கைய நாயுடு எம்வெங்கைய நாயுடு என்னும் பெயரில் டுவிட்டர் கணக்கு வைத்துள்ளார். இந்நிலையில் சரிபார்க்கப்பட்ட கணக்கு என்பதைக் குறிப்பிடும் வகையில் உள்ள நீலநிறப் பட்டையை அவரது கணக்கில் இருந்து டுவிட்டர் நீக்கியுள்ளது.

குறிப்பிடத் தக்க, உண்மையான, செயல்பாட்டில் உள்ள கணக்குகளுக்கு நீலநிறப் பட்டையில் சரி என்னும் அடையாளம் இடப்பெறும். சரிபார்க்கப்படாத கணக்குகளில் இருந்து முன்னறிவிப்பின்றி இந்த அடையாளத்தை டுவிட்டர் நீக்கிவிடும்.

அதேநேரத்தில் குடியரசுத் துணைத் தலைவருக்கான அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் நீலநிறப் பட்டை இடம்பெற்றுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments