இந்தியாவில் படிப்படியாக குறையும் கொரோனா தொற்று..! கடந்த 24 மணி நேரத்தில் 1.86 லட்சம் பேருக்கு பாதிப்பு

0 3056
இந்தியாவில் படிப்படியாக குறையும் கொரோனா தொற்று..! கடந்த 24 மணி நேரத்தில் 1.86 லட்சம் பேருக்கு பாதிப்பு

ந்தியாவில் கடந்த ஒன்றரை மாதத்தில் இல்லாத அளவுக்கு தினசரி கொரோனா பாதிப்பு 2லட்சத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.

தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதின் விளைவாக கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருந்து வருகிறது. சில நாட்களுக்கு முன் தினசரி கொரோனா பாதிப்பு 4லடசத்துக்கும் மேல் இருந்த நிலையில், தற்போது தொற்று பாதிப்பு 2லட்சத்திற்கும் கீழ் வந்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின் படி, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1லட்சத்து86ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. கடந்த 44 நாட்களில் இல்லாத அளவுக்கு தொற்று பாதிப்பு குறைந்துள்ளது. இருப்பினும், ஒரு நாளில் 3ஆயிரத்து660 பேர் பெருந்தொற்று பாதிப்புக்கு உயிரிழந்துள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 2லட்சத்து59ஆயிரத்து459 பேர் ஒரே நாளில் குணமடைந்துள்ளனர். மொத்தமாக குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் 2கோடியே 48லட்சத்து93ஆயிரத்து410 ஆக அதிகரித்துள்ளது. இதுவரையில் 20 கோடியே57 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 4 நாட்களாக தினசரி தொற்று பாதிப்பு விகிதம் 10சதவீதத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments