தமிழகத்திற்கு மத்திய அரசு குறைவான அளவில் கொரோனா தடுப்பூசி ஒதுக்கியுள்ளது - உயர்நீதிமன்றம் அதிருப்தி

0 1860
தமிழகத்திற்கு மத்திய அரசு குறைவான அளவில் கொரோனா தடுப்பூசி ஒதுக்கியுள்ளது - உயர்நீதிமன்றம் அதிருப்தி

த்திய அரசு தமிழகத்துக்குக் குறைந்த அளவில் தடுப்பு மருந்து ஒதுக்கீடு செய்துள்ளதாகச் சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

உயர்நீதிமன்றம் தாமாக எடுத்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தடுப்பு மருந்து ஒதுக்கீடு பற்றி அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், மாநில அரசுகளால் நேரடியாகத் தடுப்பு மருந்து கொள்முதல் செய்ய முடியாததால், தமிழகத்துக்கான தடுப்பு மருந்து ஒதுக்கீட்டை அதிகரிக்க மத்திய அரசுக்கு அறிவுறுத்தினர்.

யாஸ் புயலின் காரணமாக ஒடிசாவில் இருந்து தமிழகத்துக்கு ஆக்சிஜன் வழங்கல் பாதிக்கப்படும் என்பதால் மாற்று ஏற்பாடுகளைச் செய்ய மத்திய அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

இந்த ஆண்டு இறுதிக்குள் 216 கோடி டோஸ் தடுப்பு மருந்து உற்பத்தி செய்யப்படும் என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணை வியாழக்கிழமைக்குத் தள்ளி வைக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments