கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த மல்யுத்த வீரர் சுஷில்குமார் கைது

0 1615

கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த மல்யுத்த வீரர் சுஷில் குமார் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

கடந்த 4ஆம் தேதி சத்திராசல் விளையாட்டு அரங்கில் நடந்த மோதலில் சுஷில் குமார் தாக்கியதில் சக மல்யுத்த வீரர் சாகர் தன்கட் பரிதாபமாக உயிரிழந்தார். கொலை வழக்கு பதிந்த போலீசார் மல்யுத்த வீரர் சுஷில் குமார் மற்றும் அவரது நண்பர்கள் உட்பட சிலரை தேடி வந்த நிலையில் சுஷில் குமாருக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்கினர்.

இதனால் அவர் தலைமறைவானதையடுத்து, அவர் குறித்து தகவல் தருபவர்களுக்கு 1 லட்ச ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் சுஷில் குமார் மற்றும் அவரது நண்பரை தனிப்படை போலீசார் டெல்லியில் கைது செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments