மருந்து வாங்க கடைக்கு சென்றவரின் செல்போனை உடைத்து கன்னத்தில் அறைந்த மாவட்ட ஆட்சியர்

0 31320

சட்டிஸ்கர் மாநிலம் சூரஜ்பூரில் மருந்து வாங்க சென்ற நபரை மாவட்ட ஆட்சியரும் காவல்துறையினரும் அடித்து உதைக்கும் வீடியோ காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகி பரவியுள்ளது.

சாஹில் குப்தா என்பவர் மருந்துக் கடைக்கு செல்லும் போது போலீசார் அவர்  வாகனத்தை மடக்கினர். வண்டியின் ஆவணங்களை அவர் போலீசாருக்கு காட்டும் போது மாவட்ட ஆட்சியர் ரன்பீர் சர்மா அவர் மொபைல் போனை வாங்கி காலில் போட்டு மிதித்து உடைத்தார்.

பின்னர் சாஹிலை கன்னத்தில் அறைந்தார்.இதையடுத்து காவல்துறையினரும் அவரைத் தாக்கியதாக சாஹில் குப்தா தெரிவித்தார்.  இந்த காட்சி வீடியோவில் படம்பிடிக்கப்பட்டு வைரலாகப் பரவியதையடுத்து மாவட்ட ஆட்சியர் மன்னிப்பு கோரியுள்ளார். ஆனால் போலீசார் வேகமாக வாகனம் ஓட்டி வந்ததாக சாஹில் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments