"பசி எடுத்தால் எடுத்து சாப்பிடவும்” ஆதரவற்றவர்களின் பசியைப் போக்க வாழைப் பழங்களை வழங்கி பசியாற்றும் பழ வியாபாரி

0 2222
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், இல்லாதவர்கள், ஆதரவற்றவர்களின் பசியைப் போக்குவதற்காக வாழைத் தார்களை தொங்க விட்டுள்ள பழ வியாபாரியை மக்கள் மனதாரப் பாராட்டி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், இல்லாதவர்கள், ஆதரவற்றவர்களின் பசியைப் போக்குவதற்காக வாழைத் தார்களை தொங்க விட்டுள்ள பழ வியாபாரியை மக்கள் மனதாரப் பாராட்டி வருகின்றனர்.

கடலையூர் சாலையில் பழக்கடை வைத்துள்ள முத்துப்பாண்டி, தினமும் கடை வாசலில் 5 வாழைத் தார்களை தொங்க விடுவதுடன், "பசி எடுத்தால் எடுத்து சாப்பிடவும்” என்ற வாசகத்தையும் எழுதி வைத்துள்ளார்.

அவ்வழியாக செல்பவர்கள், சாலையோரங்களில் வசிப்பவர்கள், அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு வருபவர்கள் என ஏராளமானோர் வாழை பழங்களை சாப்பிட்டு விட்டுச் செல்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments