ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதி பேரறிவாளனுக்கு 30 நாட்கள் சாதாரண சிறைவிடுப்பு

0 3883
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் புழல் சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு 30 நாட்கள் சாதாரண சிறைவிடுப்பு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் புழல் சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு 30 நாட்கள் சாதாரண சிறைவிடுப்பு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

பேரறிவாளவன் உடல்நிலையை கணக்கில் கொண்டு அவருக்கு அவ்வப்போது பரோல் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிறைகளில் கொரோனா தொற்று பரவி வருவதாலும், சிகிச்சை மேற்கொள்ளவுள்ளதாலும் பேரறிவாளனுக்கு விடுப்பு வழங்கக் கோரி அவரது தாயார் அற்புதம்மாள் முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.

இதனை பரிசீலித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உரிய விதிகளை தளர்த்தி, பேரறிவாளனுக்கு 30 நாட்கள் சாதாரண விடுப்பு வழங்க உத்தரவிட்டுள்ளதாக தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments