அமெரிக்காவில் 6 லட்சம் சிறார்களுக்கு கடந்த வாரம் தடுப்பூசி :வெள்ளை மாளிகை தகவல்

0 1071
அமெரிக்காவில் 6 லட்சம் சிறார்களுக்கு கடந்த வாரம் தடுப்பூசி :வெள்ளை மாளிகை தகவல்

டந்த ஒரு வாரத்தில் அமெரிக்காவில் 6 லட்சம் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் பைஸர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பு மருந்தை 12 முதல் 15 வயதுடைய குழந்தைகளுக்கு போட்டுக் கொள்ள அனுமதியளிக்கப்பட்டது.

இதில் சுமார் 17 மில்லியன் குழந்தைகள் தடுப்பூசி போடுவதற்கு தகுதியுள்ளவர்களாக கண்டறியப்பட்டுள்ளனர். இவர்களில் முதற்கட்டமாக 6 லட்சம் குழந்தைகளுக்கு கடந்த வாரம் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

குழந்தைகள் மிகவும் அரிதாகவே கொரோனாவுக்கு இலக்கானாலும் அவர்களின் வீடுகளில் உள்ளோரும் பாதுகாப்பாக இருக்க இந்த தடுப்பூசி உதவும் என வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments