ஆந்திராவில் கொரோனா நோயாளிகளுக்காக அரசு பேருந்து ஆக்சிஜனுடன் கூடிய பேருந்தாக மாற்றம்

0 1500
ஆந்திராவில் கொரோனா நோயாளிகளுக்காக அரசு பேருந்து ஆக்சிஜனுடன் கூடிய பேருந்தாக மாற்றம்

ந்திராவில் கொரோனா நோயாளிகளுக்காக அரசுப்பேருந்தை ஆக்சிஜனுடன் கூடிய பேருந்தாக மாற்றி சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது.

கிழக்கு கோதாவரி மாவட்டம் ராஜமகேந்திரவரம் எம்.பி. மார்கானி பரத்தின் ஆலோசனையின்பேரில் 2அரசு பேருந்துகள் பிராணவாயு ரதமாக மாற்றி வடிவமைக்கப்பட்டது.

இந்த பேருந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் ஆக்சிஜனுடன் கூடிய படுக்கை கிடைக்காத வரை அவசர மருத்துவ சேவைகளுக்கு பயன்படுத்தப்பட உள்ளது.

ஒவ்வொரு பேருந்திலும் 20 பேர் வரை ஆக்ஸிஜன் சிலிண்டருடன் சிகிச்சை பெறும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

கூடுதலாக, ஒரு மினி தீவிர சிகிச்சை பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்துகள் முதலில் ராஜமகேந்திரவரத்தில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments