கொரோனாவில் இருந்து மீண்ட நோயாளிகளுக்கு ஏற்படும் பின்விளைவுகளை கவனமாக கையாள மருத்துவர்கள் அறிவுறுத்தல்

0 3534
கொரோனாவில் இருந்து மீண்ட நோயாளிகளுக்கு ஏற்படும் பின்விளைவுகளை கவனமாக கையாள மருத்துவர்கள் அறிவுறுத்தல்

கொரோனாவில் இருந்த மீண்ட நோயாளிகள் பலருக்கு நெஞ்சுவலி, பார்வை குறைபாடு, மூக்கடைப்பு, மூச்சுவிடுவதில் சிரமம் , ரத்தம் சொட்டும் இருமல் போன்ற பலவகையான பாதிப்புகளும் பின்விளைவுகளும் ஏற்படுகின்றன.

இதற்கு பெரும்பாலும் நீரிழிவு நோய் தான் காரணம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்நிலையில் நோயாளிகளின் உடலில் காணப்படும் கரிய தேமல் போன்ற அடையாளம் பீதியை ஏற்படுத்தி வருகிறது.

மகாராஷ்ட்ராவிலும் குஜராத்திலும் இத்தகைய பாதிப்புகள் அதிகமாகக் காணப்பட்டுள்ளன.Black Fungus என்ற இந்த தொற்று பாதிப்பு குறித்து பல்வேறு முக்கியத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும்போது நீரிழிவு நோயாளிகளுக்கு உடலில் ஏற்படும் மாற்றம் பாதிப்புகளை ஆரம்ப நிலையில் கண்டறிந்து குணப்படுத்துமாறு இந்திய மருத்துவ ஆய்வுக் கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் பதற்றமடைய வேண்டாம் என்றும் மருத்துவர்களின் ஆலோசனையைப் பெறும்படியும் மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். உடலில் இறந்த செல்களை நீக்கும் தெரபி மூலம் இந்த பாதிப்பை குணப்படுத்த முடியும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments