புதுச்சேரி முதலமைச்சராக நாளை பதவியேற்கிறார்‍ ரங்கசாமி..! அமைச்சர்கள் பதவியேற்பு விழா வேறொரு நாளில் நடைபெறுகிறது

0 1933
புதுச்சேரி முதலமைச்சராக நாளை பதவியேற்கிறார்‍ ரங்கசாமி..! அமைச்சர்கள் பதவியேற்பு விழா வேறொரு நாளில் நடைபெறுகிறது

புதுச்சேரி முதலமைச்சராக என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி வெள்ளிக்கிழமை பதவியேற்கிறார்‍.

அண்மையில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் என்.ஆர்‍.காங்கிரஸ்-பாஜக கூட்டணி 16 இடங்களை கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தது. இதனையடுத்து ஆட்சி அமைக்க துணைநிலை ஆளுநர் அழைப்பு விடுத்துள்ள நிலையில், முதலமைச்சராக என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி நாளை பதவியேற்கிறார்‍.

ஆளுநர் மாளிகையில் நடைபெறும் விழாவில் அவருக்கு துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்‍. அமைச்சரவை பங்கீட்டில் இழுபறி நீடிப்பதால் அமைச்சர்கள் பதவியேற்பு விழா, மற்றொரு நாளில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments